Saturday 22 May 2010

பூந்தேனில் கலந்து



பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

ஏறாத ஏணிதனில் ஏறி நடப்பாள்
நல்ல நேரம் வரும்
என்றென்றும் நல்ல புகழ்தன்னை வளர்ப்பாள்
அந்தக் காலம் வரும்

அவள் ஆரம்ப நிலையிலும் மீனாக ஜொலிப்பாள்
கலை வண்ணத் தாரகை என வருவாள்

அது நடக்கும் என நினைக்கும்
மனம் நாள் பார்த்துத் தொடங்கிவிடும்

பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

கட்டான மேனி உண்டு ஆடல் நடத்த
வண்ணத் தோகையவள்
சங்கீத ஞானமுண்டு பாடல் நடத்த
வானம்பாடியவள்

அவள் பூவிழிச் சிரிப்பினில் பூலோகம் மயங்கும்
பொல்லாதப் புன்னகை கலங்க வைக்கும்
நல்ல புகழும்
பெரும் பொருளும்
அவள் அடைகின்ற காலம் வரும்

பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

என்னைத் தன் நாதன் என்று சொல்லி மகிழ்வாள்
அதில் தயக்கமில்லை
எப்போதும் என் மடியில் துள்ளி விழுவாள்
மறு விளக்கமில்லை

அவள் தான் கொண்ட புகழ்
என்றும் நான் கொண்ட புகழ்தான்
என் நெஞ்சில் வேறெந்த நினைவுமில்லை
இதில் எனக்கும் ஒரு மயக்கம்
இது எந்நாளும் குறைவதில்லை

பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன


'ஏணிப் படிகள்' படத்தில் 'பூந்தேனில் கலந்து' 

அழகிய கண்ணே உறவுகள் நீயே

அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ

சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயும் அல்ல
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தனை அறியாதவள் தாயும் அல்ல

என் வீட்டில் என்றும் சந்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா
அழகிய கண்ணே உறவுகள் நீயே

சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
என் தெய்வம் மாங்கல்யம் தான்

அழகிய கண்ணே உறவுகள் நீயே

மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாளுமே கலையாதது
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாளுமே கலையாதது
நம்பிக்கை என்றும் கலைந்தோடுது
என் நெஞ்சம் அலையாதது

அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
============================

திரைப்படம் : உதிரிப்பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
பாடல் : கண்ணதாசன்
வெளியான் ஆண்டு : 1979

நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி

நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி

நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான்தான்
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை
இதுப்போல் வேரெங்கும் சொர்கமில்லை
உயிரே வா

நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே
உயிரே வா
(நீ பார்த்த..)

படம்: ஹேராம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஆஷா போஸ்லே, ஹரிஹரன்